search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ காப்பீட்டு"

    • அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சி அகலார் பகுதியில் உள்ள தூனேரி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாமில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்

    இந்த முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் சிகிச்சை தேவை பட்டவர்களுக்கு உயர்சிகிச்சை பரிந்துரைக்கபட்டது.

    பொது மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், குழந்தகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சித்த மருத்துவர், மனநல மருத்துவர் என அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவம் பார்த்தது மிக சிறப்பாகும்

    இந்த மருத்துவ முகாமில் சுமார் 2000 ஏழை, எளிய பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சையை தங்கள் பகுதிலேயே பெற்றது தனிசிறப்பாகும். அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டது.

    மாவட்ட ஊராட்சிதலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரிரா மசந்திரன், இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுசாமி, வட்டார மருத்துவஅலுவலர் முருகேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார் ஆகியோர் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.

    ×